செய்திகள் :

Dhoni: ``உன் ஓவரை தோனி நொறுக்க வேண்டும்'' - இளம் வீரரின் கையில் பந்தைக் கொடுத்த ரோஹித்

post image

ஐபிஎல் திருவிழா நடப்பு சாம்பியன் கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூரு அணியும், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் மும்பை அணியும், சென்னை அணியும் சேப்பாக்கத்தில் மார்ச் 23-ம் தேதி மோதின. இதில், சென்னை அணி 4 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Dhoni - csk vs mi
Dhoni - csk vs mi

அதற்கு மேலாக, எப்போதும் போல தன்னைக் காணக் குவிந்த ரசிகர்களுக்கு, மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து விருந்தளித்தார் தோனி. இந்த நிலையில், தற்போது கொல்கத்தா அணியில் முக்கிய வீரராக விளையாடிவரும் ரமன்தீப் சிங், 2022-ல் மும்பை அணியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா, தோனிக்கெதிராகத் தன்னை பந்துவீசச் சொன்ன அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

ரமன்தீப் சிங்
ரமன்தீப் சிங்

பாட்காஸ்ட் நிகழ்ச்சியையொன்றில் அதை விவரித்த ரமன்தீப் சிங், ``தோனி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ரோஹித் என்னிடம் பந்தைக் கொடுத்து, `ரோஹித் உன் ஓவரை நொறுக்க வேண்டும்' என்று கூறினார். ஏனெனில், அந்த சமயத்தில் அவர்களை ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தனர். எனவே, அவர் என் ஓவரை அடித்தாலும் பரவாயில்லை, ஒருவேளை அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தால் நாங்கள் வெற்றிபெறுவோம்" என்று கூறினார்.

மேலும், ரோஹித்தின் தலைமைப் பண்பு குறித்து பேசுகையில், ``ஒரு அணியில் நீங்கள் இடம்பிடிக்கும்போது, அந்த அணியின் கேப்டனால் மட்டும்தான் உங்களுக்கு சுதந்திர உணர்வைத் தர முடியும். ரோஹித் உண்மையான தலைவர்" என்று ரமன்தீப் சிங் கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க

GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப் வென்றது எப்படி?

பீல்டிங்கைத் தேர்வு செய்த கில்!ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் தங்கள் முதல் கணக்கைத் தொடங்க அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின... மேலும் பார்க்க

Dhoni: "ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்..." - Impact Player விதி குறித்து தோனி

IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி. அதிக ரன்கள் வரும் போட்டிகளுக்கு அணியின் மனநிலைதான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார்.202... மேலும் பார்க்க

IPL: ஆர்ச்சரை இனரீதியாக விமர்சித்த ஹர்பஜன்; வெடித்த சர்ச்சை... சாடும் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஐபிஎல் 18 வது சீசனின் இரண்டாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மார்ச் 23-ம் தேதி ஹைதராபாத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

Tamim Iqbal: ஃபீல்டிங்கின்போது நெஞ்சு வலி; மருத்துவமனையில் சொல்வதென்ன?

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத முன்னாள் வீரர் தமிம் இக்பாலுக்கு நேற்று மைதானத்தில் அவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி... மேலும் பார்க்க