நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
நியூஸிலாந்தில் இன்று(மார்ச் 25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ள இந்த பயங்கர நில அதிர்வால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
நியூஸிலாந்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள ரிவெர்டன் கடற்கரையோரப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.