டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.69-ஆக முடிவு!
தென்கொரியாவில் காட்டுத் தீ: 16 பேர் பலி! 46,000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை!
தென்கொரியாவில் பரவிய காட்டுத் தீயில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர்
தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்தச் சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அன்டோங் நகரம் மற்றும் பிற தென்கிழக்கு நகரங்களில் உள்ள பொதுமக்கள் வெளியேறவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தீ விபத்து 43,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி மற்றும் 1,300 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் உள்பட நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தீக்கிரையாகின.
கிட்டத்தட்ட 9,000 தீயணைப்பு வீரர்கள், 130-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உய்சோங் நகரத்துக்கு அருகில் சியோங்சாங் கவுன்டியில் உள்ள ஒரு சிறைச் சாலையிலிருந்து சுமார் 2,600 கைதிகளை இடமாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: சென்னையில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை