செய்திகள் :

அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் சிறைக்குச் செல்வது உறுதி: அண்ணாமலை!

post image

இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது:

”திருச்செந்தூர் திருக்கோயிலில் பல நூறு கோடி செலவில் ஆலய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றதாகத் திமுக அரசு கூறியது. ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்யப்படவில்லை என்பதைத் தொடர்ந்து செய்திகளில் கண்டு வருகிறோம்.

இந்த நிலையில், கோயிலுக்குள் பக்தர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகளின் அவல நிலையைக் காணொளியாக வெளியிட்ட தமிழக பாஜவைச் சேர்ந்த பிரதீப்ராஜன் வீட்டிற்கு, அதிகாலை நான்கு மணிக்குக் காவல்துறையை அனுப்பி மிரட்டியிருக்கிறது திமுக அரசு.

இதையும் படிக்க: தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக, தனது ஊழலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துபவர்கள் மீது, காவல் துறையையோ, குண்டர்களையோ ஏவுவது வழக்கமாகி இருக்கிறது. திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது, இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 3 மணிநேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

கோடையில் 22,000 மெகாவாட் மின் தேவை: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னையில் மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செ... மேலும் பார்க்க

மனோஜ் உடல் தகனம்

மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது. பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரின் இரு மகள்கள் இறுதிச் சடங்கு செய்தனர். இதனைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

'திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்' - சேகர்பாபு

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குப் பிறகு அது திருப்பதிக்கு இணையாக மாறும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர், திருச்செந்தூர், தஞ்சாவ... மேலும் பார்க்க

ரூ. 61 கோடியில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள்: அமைச்சர் பெரியசாமி

ஊரகப் பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி சட்டப் பேரவையில் அறிவித்தார்.சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க