புனேவில் 3 வயது மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை
புனே சந்தன் நகரில் வசித்தவர் மாதவ் திகேதி (38). இவரது மனைவி ஸ்வரூபா. இவர்களுக்கு ஹிம்மத் மாதவ் என்ற 3 வயது மகன் இருந்தார்.
ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்தவர்களான இத்தம்பதி இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது.
வழக்கம்போல் மார்ச் 22 ஆம் தேதி மாலை மீண்டும் கணவன், மனைவி இடையே இதே பிரச்னையில் தகராறு ஏற்பட்டது.
சண்டை முற்றிய நிலையில் மாதவ் தனது 3 வயது மகனை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
அவர் தனது மகனுடன் அங்குள்ள பீர் பார் ஒன்றில் அமர்ந்து மது அருந்தினார். பின்னர் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு தனது மகனுடன் அங்குள்ள வனப்பகுதிக்குச் சென்றார்.

மாதவ் வீட்டை விட்டு வெளியில் சென்று நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ஸ்வரூபா இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் தேடினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பிற்பகல் 2.30 மணிக்கு மாதவ் தனது மகனுடன் இருந்த காட்சிப் பதிவாகி இருந்தது.
ஆனால் மாலை 5 மணிக்குப் பதிவான காட்சியில் மாதவுடன் அவரது மகன் இல்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீஸார் மாதவ் எங்கு இருக்கிறார் என்பதை அவரது மொபைல் போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்தனர்.
அவர் ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி இருப்பது தெரிய வந்தது. போலீஸார் அங்குச் சென்றபோது மாதவ் மது குடித்துக்கொண்டிருந்தார்.
அவரைப் பிடித்து சென்று விசாரித்தபோது அவரால் சரியாகப் பேச முடியவில்லை. அவர் சகஜ நிலைக்கு வந்தபிறகு அவரிடம் விசாரித்தபோது மகன் ஹிம்மத்தைக் கொலை செய்து வனப்பகுதியில் போட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மாதவை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது அங்கு மாதவ் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
குழந்தையின் உடலை மீட்டு மாதவைக் கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks