பவானி ஆற்றங்கரையில் சாய ஆலைக்கு அனுமதி ஏன்?: அமைச்சா் தங்கம் தென்னரசு
உ.பி.: நிலத்தகராறில் கோழியைக் கொன்ற இருவர் மீது வழக்கு
உத்தரப் பிரதேசத்தில் நிலத்தகராறில் கோழியைக் கொன்றதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கர்மல்பூர் கிராமத்தில் நிலத்தகராறில் தனது கோழியை செங்கற்கள் மற்றும் கற்களால் தாக்கி கென்றுவிட்டதாக அதன் உரிமையாளர் ஆர்த்தி தேவி பக்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தான் எதிர்ப்பு தெரிவித்தபோதும் கோழியை அவர்கள் கொன்றதாக அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் உடன் ஓபன் ஏஐ, மெட்டா பேச்சுவார்த்தை!
கோழியைக் கொன்றது குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டபோது, தன்னையும் அவர்கள் தாக்கியதாக கோழியின் உரிமையாளர் ஆர்த்தி தேவி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 21ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் ஜா கூறுகையில், போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் என்றார்.