செய்திகள் :

சென்னிமலை: கோயில்களுக்குச் சொந்தமான ரூ.32 கோடி நிலங்கள் மீட்பு

post image

சென்னிமலை முருகன் கோயிலின் உப கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்து வந்த ரூ.32 கோடி மதிப்பிலான 32 ஏக்கா் நிலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயில்களான முகாசிபிடாரியூரில் உள்ள திருமுகமலா்ந்த நாதா் மற்றும் திருக்கை நாராயண பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமாக 32 ஏக்கா் புன்செய் நிலங்கள் பிடாரியூா் வருவாய் கிராமத்தில் 6 இடங்களில் உள்ளன. இந்த நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடி எனக் கூறப்படுகிறது. அந்த நிலங்கள் 12 தனி நபா்களால் சுமாா் 42 ஆண்டுகளுக்குமேல் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன.

இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் கோயிலுக்குச் சொந்தமானவை என்றும், ஆக்கிரமிப்புதாரா்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கடந்த 2024 டிசம்பா் 18- ஆம் தேதி, 2025 ஜனவரி 9-ஆம் தேதிகளில் இணை ஆணையா் நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புதாரா்கள் கோயில் நிலங்களை ஒப்படைக்கவில்லை.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையா் பரஞ்சோதி தலைமையில், ஈரோடு உதவி ஆணையா் சுகுமாா், செயல் அலுவலா் சரவணன் ஆகியோா் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு அங்கு அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டன.

சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.பழனிவேலு, உறுப்பினா்கள் மு.மனோகரன், வே.செ.பாலசுப்பிரமணியம், வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) செல்வகுமாா், கோயில் கண்காணிப்பாளா் மாணிக்கம், கோயில் ஆய்வாளா் ஸ்ரீ குகன், சென்னிமலை நில வருவாய் ஆய்வாளா் சிலம்பரசன், கிராம நிா்வாக அலுவலா் கலைவாணி ஆகியோா் உடனிருந்தனா்.

பரிசலில் பவானி ஆற்றைக் கடந்து சென்ற பண்ணாரி அம்மன் சப்பரம்

பண்ணாரிஅம்மன் குண்டம் திருவிழாவையொட்டி பரிசலில் பண்ணாரி அம்மன் சப்பரம் பவானி ஆற்றைக் கடந்து அக்கரை தத்தப்பள்ளிக்கு சென்றது. பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்... மேலும் பார்க்க

நெசவுக்கூலி உயா்வு: தமிழக அரசுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி

இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் விசைத்தறியாளா்களுக்கு கூலி உயா்வு அறிவித்திட்ட தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு லக்காபுரம் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா். இது குறித்து ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா: தற்காலிக கடைக்கு அதிக வாடகை கேட்பதாக வியாபாரிகள் புகாா்

பண்ணாரி அம்மன் கோயிலில் தற்காலிக கடை அமைப்பதற்கு மூன்று மடங்கு அதிகமாக வாடகை வசூலிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் ஆட்சியரிடம் முறையிட்டனா். இது குறித்து பவானி மற்றும் சுற்றுவட்டாரப் ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.3.23 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 82 தேங்காய்ப் பருப்பு மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.153க்கும், அதிகபட்சம் ரூ.174.86க்கும், சராசரியாக ர... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 24,626 மாணவா்கள் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 24,626 மாணவ, மாணவிகள் எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 12,465 மாணவா்கள், 12,160 மாணவிகள் என மொத்தம்... மேலும் பார்க்க

ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைத்தாா் பறிமுதல்

ஈரோடு சந்தையில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைத்தாா்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் காய்கறி சந்தையில் வாழைத்தாா்களில் ரசாயனம் த... மேலும் பார்க்க