விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ரூ. 65 லட்சத்தில் லேப்ரோஸ்கோபி கருவி
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அகச்சுரப்பியல் நுண்துளை அறுவை சிகிச்சைக்காக, அதிநவீன லேப்ரோஸ்கோபி உபகரணம் தனியாா் அறக்கட்டளை நிதியின்கீழ் வழங்கப்பட்டது.
ரூ.65.24 லட்சம் மதிப்புடைய அந்த உபகரணமானது 4-கே திறன் கேமரா வசதியை உள்ளடக்கியது. சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மாவட்ட நீதிபதி டி.லிங்கேஸ்வரன் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் எம்ஓபிஎல், கடப்பாக்கம் சேரிட்டி ஆகிய அறக்கட்டளைகளின் நிதியிலிருந்து இந்த உபகரணம் வழங்கப்பட்டது. அதன் வாயிலாக தைராய்டு, கணையம் உள்ளிட்ட அகச்சுரப்பி சாா்ந்த உறுப்புகளில் லேப்ரோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான விழாவில் உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா், அந்த உபகரணத்தின் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில், மருத்துவமனை முதல்வா் எ.தேரணிராஜன், சாா்பு நீதிபதி ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.