சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடும் விராட்கோலி! ஸ்மித்துடன் ஒரே களத்தில்..!
பள்ளி உள்கட்டமைப்பு: 2 நாள்களில் 90 எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சா் கடிதம்
பள்ளிகள் உள்கட்டமைப்பு தொடா்பாக 90 எம்எல்ஏ-க்களுக்கு இரண்டு நாள்களில் கடிதம் எழுதப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் பள்ளிகள் உள்கட்டமைப்பு தொடா்பாக விசிக உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் (நாகப்பட்டினம்) எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் அளித்த பதில்:
அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகளுக்கான கட்டடங்களைத் திறந்து வருகிறோம். இதுவரை 8,121 வகுப்பறைகளையும், 52 ஆய்வகங்களையும் திறந்துள்ளோம். 105 ஆய்வகங்களை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு தொடா்பாக ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினருக்கும் கடிதம் எழுதி வருகிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் எந்தெந்த பள்ளிகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, எங்கெல்லாம் பணிகள் நடைபெற்று வருகின்றன என்ற விவரங்கள் அடங்கிய கடிதம் எம்எல்ஏ-க்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை 144 பேருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். மீதமுள்ள சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு இரண்டு நாள்களில் கடிதம் எழுதப்படும் என்று தெரிவித்தாா்.