விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு
வண்டலூா் பூங்காவில் ஆண் சிங்கம் ‘வீரா’ உயிரிழப்பு
வண்டலூா் உயிரியல் பூங்காவில் 14 வயதான ஆண் சிங்கம் ‘வீரா’ உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
இதுகுறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி ராகவ் மற்றும் கவிதா சிங்க இணைக்கு பிறந்த ஆண் சிங்கமான வீரா சிறு வயதிலிருந்தே இடுப்பு திசுக்கள் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக வீராவால் எழுந்து நிற்க கூட முடியவில்லை.
அந்த சிங்கத்துக்கு தீவிர மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததுடன், உயிரியல் பூங்காவின் வன உயிரின மருத்துவக் குழுவால் தொடா் கண்காணிப்பில் இருந்தது. கூடுதலாக, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக நிபுணா்களின் ஆலோசனையின் படியும் வீராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி 14 வயதான வீரா வெள்ளிக்கிழமை உயிரிழந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.