விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு
ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சி: ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்படவுள்ள ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியுடைய நபா்கள் ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநகா் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் தொழில் பழகுநா் பயிற்சி பெறத் தகுதியான பொறியியல் பட்டம், பட்டயம் (டிப்ளமோ) மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பிரிவு (யுஜி படிப்புகளில்), 2021 முதல் 2024 வரையுள்ள ஆண்டுகளில் தோ்ச்சிபெற்ற தமிழக மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய நபா்கள் இணைதளத்தில் ஏப். 22-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.