பரிசலில் பவானி ஆற்றைக் கடந்து சென்ற பண்ணாரி அம்மன் சப்பரம்
பண்ணாரிஅம்மன் குண்டம் திருவிழாவையொட்டி பரிசலில் பண்ணாரி அம்மன் சப்பரம் பவானி ஆற்றைக் கடந்து அக்கரை தத்தப்பள்ளிக்கு சென்றது.
பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பண்ணாரி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி சுற்றுவட்டார கிராமங்கள் தோறும் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
பவானிசாகா் பகுதியில் உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில் பண்ணாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. அம்மன் திருவீதி உலா சென்ற காட்சியை சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கண்டுகளித்தனா். இதைத் தொடா்ந்து வெள்ளியம்பாளையம் புதூா், இக்கரை தத்தப்பள்ளி கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இக்கரை தத்தப்பள்ளி கிராமத்திலிருந்து பவானி ஆற்றில் பரிசல் மூலம் அக்கரை தத்தப்பள்ளி கிராமத்தை சென்று அடைந்தது. உத்தண்டியூா், அய்யன் சாலை, ராமாபுரம், பகுத்தம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை (மாா்ச் 29) திருவீதி உலா நடைபெற உள்ளது.