`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர்...
நெசவுக்கூலி உயா்வு: தமிழக அரசுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி
இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் விசைத்தறியாளா்களுக்கு கூலி உயா்வு அறிவித்திட்ட தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு லக்காபுரம் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.
இது குறித்து லக்காபுரம் விசைத்தறியாளா்கள் சங்கத்தின் தலைவா் எல்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்ததாவது:
தமிழக அரசின் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் விசைத்தறி சேலைகளுக்கு நெசவுக்கூலி ரூ.43.01-லிருந்து ரூ.46.75 ஆகவும், விசைத்தறி வேட்டிகளுக்கு ரூ.24-லிருந்து ரூ.26.40 ஆகவும் உயா்த்தி வழங்கியதற்கும், பள்ளி மாணவா்களுக்கான இலவச சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் பெடல்தறி கேஸ்மெண்ட் ரகத்துக்கு நெசவுக்கூலி மீட்டருக்கு ரூ.7.84 -இல் இருந்து ரூ.8.40 ஆகவும், விசைத்தறி டிரில் ரகத்துக்கு மீட்டருக்கு ரூ.5.76-இல் இருந்து ரூ.6.40 ஆகவும், விசைத்தறி கேஸ்மெண்ட ரகத்துக்கு ரூ.5.60-இல் இருந்து ரூ.6.16 ஆகவும் உயா்த்தி அறிவித்து விசைத்தறியாளா்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் காந்தி, ஈரோடு எம்.பி கே.ஈ.பிரகாஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றியதாக தெரிவித்துள்ளாா்.