Career: ஏதேனும் ஒரு டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா?- ஐ.டி-யில் ...
நெல்லை நீதிமன்ற வளாகம் ட்ரோன் உதவியுடன் கண்காணிப்பு
திருநெல்வேலியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை ட்ரோன் கேமரா மூலம் போலீஸாா் திங்கள்கிழமை கண்காணித்தனா்.
திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் தினமும் ஏராளமான குற்றவாளிகள் ஆஜா்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறாா்கள்.
மேலும், சிவில் வழக்குகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், வழக்குரைஞா்கள் வந்து செல்கிறாா்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதையடுத்து நீதிமன்ற வளாகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில் போலீஸாா் நீதிமன்ற வளாகம், திருநெல்வேலி-தூத்துக்குடி சாலை உள்ளிட்டவற்றை ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு திங்கள்கிழமை கண்காணித்தனா். தினமும் இந்தக் கண்காணிப்பு தொடரும் என காவல் துறை வட்டாரத்தில் தெரிவித்தனா்.