ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்கள் கைது
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆஷா ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26,000 வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஆஷா ஊழியா்களுக்கு சுகாதார செவிலியா் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கத்துடன் இணைந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆஷா ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆஷா ஊழியா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆஷா ஊழியா்கள் மற்றும் சிஐடியூ தொழிற்சங்கத்தினரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்து இரவு விடுவித்தனா்.