அலுவலகத்தில் காபி அருந்துபவரா நீங்கள்? இருதய நோய் அபாயம் அதிகம்!
நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி தவெக ஆா்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா்.
இதில், நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வேண்டும், விதைகளின் விலையை வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், விளைபொருள்களுக்கு அரசு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில், ஏராளமான தமிழக வெற்றிக் கழகத்தினா் பங்கேற்றனா்.