திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: `அண்ணாமலை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!' - பியூஷ் மனுஷ்...
உதகை ரோஜா பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்
வார விடுமுறையையொட்டி, உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் உதகை ரோஜா பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்திருந்தனா்.
உதகையில் நிலவும் இதமான கால நிலையை அனுபவித்ததுடன், பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண ரோஜா மலா்களைக் கண்டு ரசித்து புகைப்படம், தற்படம் எடுத்து மகிழ்ந்தனா். அவ்வப்போது சாரல் மழையும் பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்தனா்.