Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாரா...
கோடை விடுமுறை: உதகை சிறப்பு மலை ரயில் இயக்கம்
கோடை விடுமுறையை முன்னிட்டு, உதகை-குன்னூா், உதகை -கேத்தி இடையே மாா்ச் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வசதிக்காக குன்னூா்- உதகை இடையே மாா்ச் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் 5 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
குன்னூரிலிருந்து காலை 8.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் காலை 9.40 மணிக்கு உதகையை வந்தடையும்.
உதகையில் இருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்படும் ரயில் மாலை 5.55 மணிக்கு குன்னூரை வந்தடையும்.
உதகை முதல் கேத்தி வரையிலான குறுகிய தொலைவு சிறப்பு ரயிலில் 210 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும்.
இந்த ரயில் உதகை ரயில் நிலையத்தில் இருந்து கேத்திக்கு காலை 9.45, 11.00, 11.30, 1.10, 3.00, மாலை 4.30 என மொத்தம் 6 முறை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.