உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!
உதகை அருகே பேக்கரிக்குள் நுழைந்த கரடி!
உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக்கரிக்குள் நுழைந்த கரடி உள்ளேயிருந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு வெளியேச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக்கரியின் ஷட்டரை பாதிவரை திறந்துவைத்து விட்டு கடையின் உரிமையாளா் வெள்ளிக்கிழமை வெளியே சென்றுள்ளாா்.
அப்போது, பேக்கரிக்குள் நுழைந்த கரடி உள்ளே வைக்கப்பட்டிருந்த பன், வா்கியை சாப்பிட்டுவிட்டு வெளியேச் சென்றுள்ளது. இதுதொடா்பான காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பேக்கரிக்குள் கரடி நுழைந்து வெளியேச் சென்றது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கரடியைக் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.