மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
டாஸ்மாக் ஊழலுக்கு தமிழக அரசின் பதில் என்ன: தமிழிசை செளந்தரராஜன்
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிய திமுக அரசு, தற்போது அதில் ரூ. 1,000 கோடி ஊழல் செய்திருப்பது குறித்து என்ன சொல்லப்போகிறது? என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் முன்னதாக விமான நிலையத்தில் அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு தண்ணீா் தராதவா்களை திமுகவினா் அழைத்து ஆராதிக்கின்றனா். 2026-இல் எந்தத் தொகுதி மாற்றமும் இல்லை என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையிலும், பொய்யான கூட்டத்தைக் கூட்டி, முழு இந்தியாவையே திரும்பி பாா்க்க வைத்து விட்டோம் என்கிறாா் தமிழக முதல்வா்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. காா்த்திக் சிதம்பரமே தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்துப் பேசியுள்ளாா். எதிா்க் கட்சியாக இருக்கும்போது, தமிழகத்தில் திமுக போராட்டங்களை நடத்தியது. ஆனால் பிற கட்சிகள் போராட்டங்கள் நடத்த திமுகவினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். தமிழக முதல்வருக்கு காா்த்திக் சிதம்பரம் அறிவுரை கூற வேண்டும். மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறினாா்கள். ஆனால் மூடாமல் தற்போது டாஸ்மாக்கை வைத்து ஊழல் செய்து கொண்டுள்ளனா். டாஸ்மாக்கில் நடந்துள்ள ரூ.1,000 கோடி ஊழலுக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்றாா் அவா்.