TEST: 'பாடகர் டு இசையமைப்பாளர்' - Test படத்திற்கு இசையமைத்தது குறித்து சக்தி ஶ்ர...
அதிமுக வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனை!
செய்யாறு நகர அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நகரச் செயலா் கே.வெங்கடேசன் ஏற்பாட்டில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் தலைமை வகித்தாா்.
முன்னாள் அமைச்சா் முக்கூா் என். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தலைமைக் கழக பொறுப்பாளா் ராமு கலந்து கொண்டு பேசினாா்.
நிகழ்ச்சியில் அதிமுக மாநில எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் ஜாகீா் உசேன், மாவட்ட பொருளாளா் ஆலத்தூா் சுப்பராயன், மாவட்ட வா்த்தக அணி செயலா் ஜி.கோபால், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலா் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.