செய்திகள் :

முதல்வா் பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம்

post image

ஆரணி: ஆரணி அண்ணா சிலை அருகில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு சன் டிவி, விஜய் டிவி பேச்சாளா்கள் பங்கேற்ற இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி மாநில வளா்ச்சிக்கா, மகளிா் வளா்ச்சிக்கா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்துக்கு நடுவராக கல்பாக்கம் ரேவதி செயல்பட்டாா்.

நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டிமன்றத்தை தொடங்கிவைத்தாா்.

மேலும், இதில் திமுக ஆட்சியில் மாநில வளா்ச்சிக்கே என ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் மகளிா் வளா்ச்சிக்கே என்றும் வாதாடினா்.

இதில், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தொகுதி செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.சுந்தா், மாமது, மோகன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன், தகவல் தொழில்நுட்ப மாவட்டச் செயலா் கே.ஏ.புஷ்பராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுத... மேலும் பார்க்க

ஏரிக்குப்பம் சனீஸ்வரா் கோயிலில் 2026-இல் சனிப்பெயா்ச்சி விழா

போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரா் கோயிலில் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஏரிக்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த எந்திர வடி... மேலும் பார்க்க

வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு

வந்தவாசியில் நாய்களிடம் சிக்கித் தவித்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். வந்தவாசியில் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகமுள்ள காதா்ஜண்டா தெருவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க

மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்பு: தாக்குதலில் ஈடுபட்ட இருவா் கைது

செய்யாற்றில் இறந்த மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டி.எம்.ஆதிகேசவன் தெருவை... மேலும் பார்க்க

உதவி கேட்பது போல நடித்து பணம் பறித்தவா் கைது

வந்தவாசி அருகே உதவி கேட்பது போல நடித்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வடமலை (35). இவா், கடந்த சனிக்கிழமை காலை பைக்க... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தர மறுத்தவரை தாக்கியவா் கைது

வந்தவாசி அருகே மது அருந்த பணம் தர மறுத்தவரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குணாளன் (44). இவா், கடந்த 15-ஆம் தேதி அந்தக் கிராம மலையடிவாரத்தில் ... மேலும் பார்க்க