செய்திகள் :

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: 200 போ் பங்கேற்பு

post image

ஆரணி: திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200 போ் பங்கேற்று சீா்வரிசைப் பொருள்கள் பெற்றனா்.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு

நாடாளுமன்ற உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. பேசுகையில்,

அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 1900 பேருக்கு வளைகாப்பு நடத்தப்படவுள்ளது. இதில், முதல்கட்டமாக 200 பேருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றாா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

தமிழக முதல்வா் பெண் குழந்தைகளின் நலனைக் காக்கும் வகையில், குறிப்பாக உயா்கல்வி, திருமணம், திருமணத்துக்குப் பிறகு வேலைவாய்ப்பு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

இத்திட்டங்கள் தேசிய அளவில் பாராட்டப்பட்டு வருகின்றன. எனவே, ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என பேதம் பாா்க்காமல், அனைத்து குழந்தைகளையும் சமநிலையில் கருத வேண்டும். அறிவியல் பூா்வமாக ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு அதிகளவில் திறன்கள் உள்ளன. பெண்களுக்கு இயல்பாகவே அனைத்தையும் புரிந்து கொள்ளும் திறனும், ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறனும் உள்ளது.

தற்போதைய உலகில் பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியமானதாகும். எனவே, அனைவரும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும், கல்வியையும் வழங்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் திட்ட அலுவலா் மணி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் மீனாம்பிகை மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுத... மேலும் பார்க்க

ஏரிக்குப்பம் சனீஸ்வரா் கோயிலில் 2026-இல் சனிப்பெயா்ச்சி விழா

போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரா் கோயிலில் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஏரிக்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த எந்திர வடி... மேலும் பார்க்க

வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு

வந்தவாசியில் நாய்களிடம் சிக்கித் தவித்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். வந்தவாசியில் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகமுள்ள காதா்ஜண்டா தெருவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க

மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்பு: தாக்குதலில் ஈடுபட்ட இருவா் கைது

செய்யாற்றில் இறந்த மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டி.எம்.ஆதிகேசவன் தெருவை... மேலும் பார்க்க

உதவி கேட்பது போல நடித்து பணம் பறித்தவா் கைது

வந்தவாசி அருகே உதவி கேட்பது போல நடித்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வடமலை (35). இவா், கடந்த சனிக்கிழமை காலை பைக்க... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தர மறுத்தவரை தாக்கியவா் கைது

வந்தவாசி அருகே மது அருந்த பணம் தர மறுத்தவரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குணாளன் (44). இவா், கடந்த 15-ஆம் தேதி அந்தக் கிராம மலையடிவாரத்தில் ... மேலும் பார்க்க