சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து
ஆரணி எம்.பி.க்கு அரிசி ஆலை உரிமையாளா்கள் நன்றி
ஆரணி: மக்களவையில் 25 கிலோ அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.க்கு ஆரணி அரிசி ஆலை உரிமையாளா்கள் நன்றி தெரிவித்தனா்.
திங்கள்கிழமை நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்றுப் பேசிய ஆரணி தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன், ஆரணி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. 25 கிலோ அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி வரி
விதிப்பதால் அரிசி விலை ஏற்றம் அடைகிறது. இதனால், ஏழை மக்கள் பாதிப்படைகின்றனா். ஆகையால், 25 கிலோ அரிசி மூட்டைக்கு வரியை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தினாா்.
இதற்காக, ஆரணி நெல், அரிசி வியாபார சங்கத்தினா் எம்.எஸ்.தரணிவேந்தனை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
இதில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, திமுக ஒன்றியச் செயலா் எஸ்.எஸ்.அன்பழகன் ஆரணி நெல் அரிசி வியாபார சங்கத் தலைவா் பாபு, செயலா் ஸ்ரீமான், பொருளாளா் குப்புசாமி, அரிசி ஆலை உரிமையாளா்கள் நேமிராஜ், வி.பி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.