மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
திருப்பத்தூா்-சேலம் சாலையில் பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிா்நோக்கியுள்ளனா்.
திருப்பத்தூா்-சேலம் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள், காா்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையில் தமிழக அரசு போக்குவரத்து பணிமனை எதிரே பள்ளம் ஏற்பட்டுள்ளது (படம்). இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குளாகின்றனா். குறிப்பாக இரவில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து செல்கின்றனா்.
2 மாதத்த்துக்கும் மேலாக உள்ள இந்த பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.