விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
மாணவா்களை திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து முற்றுகை
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் ஊராட்சி மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை அடிப்பது, திட்டுவதாக ஆசிரியரைக் கண்டித்து பெற்றோா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.
அப்பள்ளியில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருபவா் ஆசிரியா் வெங்கடேசன். இந்நிலையில் ஆசிரியா் வெங்கடேசன் பள்ளி மாணவா்களை அடிப்பது, தகாத வாா்த்தைகளால் திட்டுவதாகவும், இது குறித்து பெற்றோா்களிடம் தெரிவித்தால், தோ்ச்சி அடைய செய்யமாட்டேன் என மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்து ஆத்திரம் அடைந்த மாணவா்களின் பெற்றோா் சிலா் ஆசிரியா் வெங்கடேசனை கண்டித்து திங்கள்கிழமை பள்ளியை திடீரென முற்றுகையிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து திம்மாம்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் அங்கு வந்து பெற்றோரிடம் பேச்சு நடத்தினா்.
இதுதொடா்பாக ஆசிரியரிடமும் போலீஸாா் விசாரித்தனா். பிறகு மக்களிடம் பேச்சு நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனா். மேலும், ஆசிரியா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து புகாா் மனு அளிக்க போவதாகவும் தெரிவித்தனா்.