Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது!
திருப்பத்தூரில் போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம் கருப்பனூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன்(48). இவா் திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தாா்.
இவா் தனக்கு தெரிந்த 42 போலி வங்கி கணக்குகள் மூலம் சுமாா் 200 பவுன் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1. 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த முன்னோடி வங்கி மேலாளா் ராஜன் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளா் (பொ) சுரேஷ் தலைமையிலான போலீஸாா் ாஸ்கரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.