தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!
இளைஞரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது
திருப்பத்தூரில் இளைஞரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் - புதுப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜகான் (28). இவா், கடந்த டிசம்பா் மாதம் புதுப்பேட்டை சாலைப் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக மது போதையில் வந்த சபரிராஜன் (25) என்பவா், அவதூறாகப் பேசி தகராறு செய்துள்ளாா்.
மேலும், ஷாஜகானை சபரிராஜன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சபரிராஜனை தேடி வந்தனா். இந்த நிலையில் சனிக்கிழமை போலீஸாா் சபரிராஜனை கைது செய்தனா்.