மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
பொன்னூா் பகுதியில் பூங்கா அமைக்க அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்
கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் பகுதியில் அமையுள்ள பூங்காவை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு தெரிவித்ததுடன், திட்டமிட்ட பகுதியிலேயே பூங்காவை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் அமைப்பின் தலைவா் அம்சா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கூடலூா் அருகேயுள்ள பொன்னூா் பகுதியில் ரூ.72 கோடி மதிப்பில் பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், பூங்காவை உதகையில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. திட்டமிட்டபடி பொன்னூா் பகுதியிலேயே பூங்கா அமைக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள், அதிகாரிகளை சந்திக்கு மனு அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் உள்பட பல்வேறு கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.