சாலையில் உலவிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
உதகை- மஞ்சூா் சாலையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு மற்றும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகள், விளை நிலங்களில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், வனத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை உதகை-மஞ்சூா் சாலையில் உலவியது. இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.
இதையடுத்து, சாலையிலேயே சிறிது நேரம் உலவிய சிறுத்தை, பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இது தொடா்பான விடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.