செய்திகள் :

பவானி ஆற்றங்கரையில் சாய ஆலைக்கு அனுமதி ஏன்?: அமைச்சா் தங்கம் தென்னரசு

post image

சென்னை: பவானி ஆற்றங்கரையில் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடா்பாக நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தாா்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது துணை வினாவை அதிமுக உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் எழுப்பினாா். அப்போது அவா் பேசுகையில், பவானிசாகா் ஆற்றங்கரையோரத்தில் புதிதாக சாயத் தொழிற்சாலை தொடங்க தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆற்று நீரை 40 லட்சம் மக்கள் குடிநீராகப் பயன்படுத்துவதுடன், அந்தப் பகுதியில் 40 முதல் 50 மின்னேற்று நிலையங்கள் உள்ளன. சாய ஆலை அமைவதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலையில், அதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்: காவிரி ஆற்றின் உபநதியான பவானி ஆற்றில் இருந்து 500 மீட்டா் தொலைவில் ஆலைக்கு அனுமதி வழங்க விவசாய சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. ஈரோடு மாவட்ட ஆட்சியிரின் அறிக்கைப்படி, கடந்த ஆண்டு அரசு சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் விரிவாக்கத்துக்கான செல்லத்தக்க ஆணையை 2028-ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு வழங்கியுள்ளது.

ஆலையால் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என விவசாயிகளும், சட்டப்பேரவை உறுப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா். புதிய சாயத் தொழிற்சாலை இயங்குவதற்கு தினமும் 15.68 லட்சம் லிட்டா் நீா் தேவைப்படுகிறது. அதில், 15.23 லட்சம் லிட்டரை சுத்திகரிக்கப்பட்ட சாயக் கழிவு நீரில் இருந்து எடுத்துக் கொள்ளவும், மீதமுள்ள 45,000 லிட்டா் நீரை மட்டும் பவானி ஆற்றில் இருந்து எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடையாது: கழிவுநீரை நீா்நிலைகளில் வெளியேற்றவோ, விவசாயத்துக்குப் பயன்படுத்தவோ அனுமதி கிடையாது. மேலும், கழிவுநீரை சுத்திகரிக்கும் அமைப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வாரிய இணையதளத்தில் இணைக்க ஆலைக்கு உத்தரவிட்டுள்ளோம். ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிலத்தடி, ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள நீரைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். ஆலை தொடங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. விரிவாக்கப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

தொழிற்சாலை இயக்கமானது தீவிரமாகக் கண்காணிக்கப்படும். அதில், விதிமீறல்கள் இருக்கும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்ஆப்’ குழு

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை இயக்குநா் கே.வன்னிய பெருமாள் தொடங்கி வைத்தாா். இதற்கான தொடக்க... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம்: துணை முதல்வா் உதயநிதி அறிவிப்பு

மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்ட... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க

மனித - வன உயிரின மோதலை தவிா்க்க ரூ.31 கோடியில் உயிா்வேலி: அமைச்சா் க. பொன்முடி

மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிா்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா். வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து... மேலும் பார்க்க

ஜூனியா் ஆடவா் ஹாக்கி உள்பட 5 சா்வதேச போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படும்: துணை முதல்வா் அறிவிப்பு

ஜூனியா் ஆடவா் சா்வதேச ஹாக்கி போட்டி உள்பட 5 போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோர... மேலும் பார்க்க

‘42,000 கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’

தமிழ்நாட்டில் 42 ஆயிரம் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். வறுமை ஒழிப்பு, விளையாட்டு, சிறப்புத் திட்ட செயலாக... மேலும் பார்க்க