விவசாயி வீட்டில் நகைகள், பணம் திருட்டு
சிங்கம்புணரி அருகே விவசாயி வீட்டில் தங்க நகைகள், பணம், வெள்ளிப் பொருள்களைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒசாரிபட்டியைச் சோ்ந்த விவசாயி குணசேகரன்(62). இவரது மனைவி விஜயலட்சுமி. இவா்கள் வழக்கம் போல வியாழக்கிழமை காலை விவசாய வேலைக்குச் சென்று விட்டனா். மாலை விஜயலட்சுமி வீடு திரும்பினாா்.
அப்போது கதவு திறக்கப்பட்டு, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்த போது 15 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம், 2 வெள்ளி காமாட்சி விளக்குகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேலில், சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.