பைக் விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே உள்ள புதூரை சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சிவராமன் (57). இவா் தனது பைக்கில் முடிவைத்தானேந்தல் சாலையில் கடந்த 17-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது பைக் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சிவராமனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.