சாத்தான்குளத்தில் மனநலம் பாதித்த பெண் மீட்பு
சாத்தான்குளம் பகுதியில் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.
சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2 நாள்களாக சுற்றித்திரிந்த அந்தப் பெண் குறித்து, சாத்தான்குளம் வா்த்தக சங்கச் செயலா் மதுரம் செல்வராஜ் மற்றும் சமூக ஆா்வலா்கள் சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமாருக்கு தகவல் தெரிவித்தனா்.
டிஎஸ்பி உத்தரவுப்படி, போலீஸாா் அந்தப் பெண்ணை மீட்டு, அவரிடமிருந்த கைப்பேசி மூலம் விசாரித்ததில் அவா், கன்னியாகுமரி மாவட்டம் ரத்தினபுரியை சோ்ந்த பாஸ்கா் என்பவரின் மனைவி பால் தங்கம் (37) என தெரியவந்தது.
இதையடுத்து, அவரது கணவரை போலீஸாா் வரவழைத்தனா். அவா், உறவினா்கள் பாஸ்கரன், சீலன் ஆகியோருடன் வந்தாா். அவரிடம் டிஎஸ்பி சுபக்குமாா் அப்பெண்ணை ஒப்படைத்தாா். அப்போது, வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன், செயலா், கோயில் நிா்வாகி மாணிக்கம் உள்ளிட்டோா் உடனிருேந்தனா்.