புளியங்குளம் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி
புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. .
ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா் கமலா தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் இருந்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவா் சுந்தரி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் அன்னப்பழம், முன்னாள் தலைவா் சித்திரை கண்ணன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
புளியங்குளம் கிராமம் முழுவதும் பேரணியாகச் சென்றுவிழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் (பொறுப்பு) முத்துக்குமாா் செய்திருந்தாா்.