`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
தூத்துக்குடியில் வாழை இலை விலை வீழ்ச்சி
தூத்துக்குடி காய்கனி சந்தையில் வாழை இலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆத்தூா், குலையன் கரிசல், அகரம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 20ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து தூத்துக்குடி காய்கனி சந்தைக்கு வாழைகுலை, வாழை இலை விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், தற்போது வரத்து அதிகம் இருப்பதாலும், முகூா்த்த தினங்கள் இல்லாததாலும் வாழை இலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
வழக்கமாக 200 இலைகள் கொண்ட பெரிய வாழை இலை கட்டு ரூ. 5 ஆயிரம் வரை விற்பனையாகும். ஆனால் இது தற்போது ரூ.1,300 வரை விற்பனையாகிறது. மேலும் 200 இலைகள் கொண்ட சிறிய வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனையாகிறது.
இந்த விலை வீழ்ச்சி காரணமாக வாழை இலைகளா வெட்டி சந்தைக்கு கொண்டுவரும் கூலி கூட கிடைக்காத நிலையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இருப்பினும், சில வாரங்களில் விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.