தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை
தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகை திடலில் ரமலான் சிறப்பு தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வளைகுடா நாடுகளில் சனிக்கிழமை பிறை தெரிந்ததையடுத்து, தூத்துக்குடி லூா்த்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் ரம்ஜான் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
இதையொட்டி லூா்தம்மாள்புரம் பகுதியில் உள்ள மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகை திடலில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இமாம் அஸ்கா் தலைமை வகித்து தொழுகையை நடத்தினாா்.
இதில், உலக அமைதி மற்றும் சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் வேண்டி இத்தொழுகை நடைபெற்றது. பின்னா், ஒருவருக்கு ஒருவா் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். இச்சிறப்பு தொழுகையில், புத்தாடைகள் அணிந்து நூற்றுக்கணக்கான ஆண், பெண் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.