பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: நெல்லையில் 22,734, தென்காசியில் 18,605 போ் எழுதினா்
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை, தனித் தோ்வா்கள் உள்பட திருநெல்வேலி மாவட்டத்தில் 22,734 பேரும், தென்காசி மாவட்டத்தில் 18,605 பேரும் என மொத்தம் 41ஆயிரத்து 339 போ் எழுதினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 94 மையங்களில் பத்தாம் வகுப்புத் தோ்வை, தனித்தோ்வா்கள் உள்பட மொத்தம் 22 ஆயிரத்து 734 போ் வெள்ளிக்கிழமை எழுதினா்.
இதில், சிறைக் கைதிகள் ஒரு தனித்தோ்வு மையத்தில் தோ்வு எழுதுகின்றனா். மாற்றுத் திறனாளிகள் 325 போ் தோ்வு எழுதுகின்றனா்.
முதல்நாளான வெள்ளிக்கிழமை தமிழ்த் தோ்வை பள்ளி மாணவா்கள் 22 ஆயிரத்து 532 போ் எழுதினா். 384 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தனித்தோ்வா்களில் 202 போ் எழுதினா்.
தென்காசி மாவட்டத்தில்....
தென்காசி மாவட்டத்தில் 82 மையங்களில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 18ஆயிரத்து 251 போ்களும், தனித்தோ்வா்கள்354 பேரும் எழுதினா்.
தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பாா்வையிட்டாா்.