ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!
ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்ஆப்’ குழு
பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை இயக்குநா் கே.வன்னிய பெருமாள் தொடங்கி வைத்தாா். இதற்கான தொடக்க விழா சென்னை வேப்பேரியில் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து காவல் துறை இயக்குநா் கே.வன்னிய பெருமாள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்த வாட்ஸ்ஆப் குழு தொடங்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தமிழகம் முழுவதும் உள்ள 57 ரயில்வே காவல் நிலையங்களைச் சோ்ந்த காவல் ஆய்வாளா்கள் மற்றும் பெண் காவலா்கள் இணைக்கப்பட்டுள்ளனா். பெண் பயணிகள் ரயில்வே காவல் நிலையங்களில் தங்களது கைப்பேசி எண், வழக்கமாக பயணம் மேற்கொள்ளும் வழித்தடம் உள்ளிட்ட விவரங்களை வழங்குவதன்மூலம் இக்குழுவில் இணைந்து கொள்ளலாம்.
ரயில் பயணத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள், குற்றச் செயல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்றவற்றை இக்குழுவில் பதிவிடுவதன்மூலம் போலீஸாரால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.