செட்டியாபத்து கோயிலில் அடிக்கல் நாட்டு விழா
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்கோயில் மூலமாக ரூ.20 லட்சத்தில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா் அறங்காவலா் குழு தலைவா் ஒ.மகேஸ்வரன், முடி காணிக்கை மண்டப கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினாா்.
இதில், திருக்கோயில் செயல் அலுவலா் மா.பாலமுருகன், அறங்காவலா்கள் ம.ஜெகநாதன், அ.சுமதீந்திர பிரகாஷ், சி.சுந்தர்ராஜ், பு. கஸ்தூரி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ஜம்புராஜ், ஊா்நலப் பிரமுகா்கள் பாஸ்கரன், ஞானேந்திர பிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.