சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, பல்வேறு அரசு அலுவலகங்களிலும் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அரசுக்கு வரி இழப்பு ஏற்படுகிறது.
எனவே முறையாக வாகன தணிக்கை மேற்கொண்டு, சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உரிமை குரல் ஓட்டுநா் தொழிற்சங்கத்தினா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜாவிடம் மனு அளித்தனா்.