செய்திகள் :

ஜார்க்கண்ட்: கிராமவாசிகள் தாக்கியதில் 5 வனக்காவலர்கள் படுகாயம்!

post image

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூ மாவட்டத்தில் கிராமவாசிகள் தாக்கியதில் 5 வனக்காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

பலாமூ மாவட்டத்தின் பன்ஸ்திஹா வனப்பகுதியில் சட்டவிரோதமாக பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று (மார்ச் 22) இரவு அந்த வனப்பகுதியினுள் 16 வனக்காவல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 2 டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அப்போது, அங்கு திரண்டிருந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட கிராமவாசிகள் வனக்காவலர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதையும் படிக்க: தில்லியில் சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொன்ற சகோதரர்கள் கைது

இந்நிலையில், தாக்குதலில் பலத்த காயமடைந்த அதிகாரிகள் மீட்கப்பட்டு மெதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, விசாரணை மேற்கொண்டு வரும் சத்ராப்பூர் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட கிராமவாசிகளை தேடி வருகின்றனர்.

மனோஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவா்கள் இரங்கல்

சென்னை: இயக்குநா் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மறைவுக்கு, தமிழக அரசியல் கட்சி தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மகனும், நடிகரு... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அதிமுக அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்த கருப்பசாமி பாண்டியன்(76) உடல் நல குறைவால் புதன்கிழமை காலை காலமானார். மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் பலியான 3 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் க... மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!

மேற்கு வங்கத்திலுள்ள இந்தியா - வங்கதேசத்தின் எல்லையில் 16 கால்நடைகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மால்டா மாவட்டத்தின் எல்லைப் புறக்காவல் ... மேலும் பார்க்க

விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக விடியோ பதிவிட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கராச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் ரஃப்தார் எனும் டிஜிட்டல... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியைத் தினமணி நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்தித்துப் பேசினார்.தில்லியில் பிரதமரை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தித்த கி. வைத்தியநாதன், தினமணியின் 90 ஆம் ஆண்டு சிறப்பு மலர் ... மேலும் பார்க்க