தில்லியில் சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொன்ற சகோதரர்கள் கைது
சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொலை செய்ததாக இரண்டு சகோதரர்களை தில்லி போலீஸார் கைது செய்தனர்.
தலைநகர் தில்லியில், சராய் ரோஹில்லாவின் ஹரிஜன் பஸ்தியில் உள்ள ரயில் பாதை அருகே கடந்த 17ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார், தலையில் காயமடைந்த நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இறந்தவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மல்கான் (31) என்பது அடையாளம் காணப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணையில் இறங்கினர்.
சசிகலா, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை: இபிஎஸ் உறுதி
55க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பிறகு, ஆனந்த் பர்பத் பகுதியில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட மோனு (24) மற்றும் யோகேந்தர் (33) ஆகியோரை மார்ச் 18 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மல்கானை இருவரும் கொன்றதை ஒப்புக்கொண்டனர் என்று போலீஸார் கூறினர்.
குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மல்கானுடன் இணைந்து ஓவியர்களாக வேலை செய்ததாகவும், சம்பளம் வழங்காததால் ஆத்திரமடைந்த இருவரும், மல்கானை செங்கலால் தாக்கியதில் பலியானார் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.