திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் ந...
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் சிறிது நேரம் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் கூறுகையில்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகளின் ஊதியம் 15 நாள்களுக்கு மேல் தாமதமாகிவிட்டால், அவர்களுக்கு வட்டியுடன் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், கேரளத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தைச் சரியான நேரத்தில் பெறுவதில்லை. இதற்கு மத்திய அமைச்சரிடமிருந்து உறுதியான பதிலும் இல்லை.
இந்தத் திட்டத்தை முடிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் ஊதியம் 15 நாள்களுக்கு மேல் தாமதமாகிவிட்டால், தாமதமான ஊதியத்திற்கு வட்டி பெற வேண்டும் என்று வேணுகோபால் எடுத்துரைத்தார். இதனைக் கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரியங்கா, ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இன்று முன்னதாக தில்லி முதல்வர் ரேகா குப்தா தேசிய தலைநகருக்கான 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு தில்லி அரசின் பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி என்று அவர் கூறினார். பட்ஜெட்டை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று கூறிய முதல்வர், இது மோசமான பொருளாதாரத்திலிருந்து தில்லிக்கு மாற்றும் பட்ஜெட் என்று கூறினார்.