தனுஷ் இயக்கத்தில் அஜித்? - தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விகடனுக்குக் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்!
நடிகராகவும் இயக்குநராகவும் பம்பரமாய் சுற்றி வருகிறார் தனுஷ். ̀ராயன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கியிருந்த ̀நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. தனது சகோதரியின் மகன் பவிஷை இப்படத்தை நாயகனாக நடிக்க வைத்திருந்தார்.

இவரை தாண்டி பல ஜென் சி பட்டாளமே இப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே அவர் ̀இட்லி கடை' படத்தை டைரக்ஷன் செய்ய தொடங்கிவிட்டார்.
இப்படத்தில் தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவித்திருந்தனர். ஆனால், இன்னும் சில காட்சிகளின் படப்பிடிப்பு மீதமுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விகடனுக்கு அளித்த ப்ரத்யேக பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, ̀இட்லி கடை' படத்திற்குப் பிறகு தனுஷ் அஜித்தை கதாநாயகனாக வைத்து இயக்கப் போகிறார்.

அப்படத்தையும் ̀இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கிசு கிசுவாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. இது குறித்தும் விகடனுக்கு அளித்த பேட்டியில் ஆகாஷ் பாஸ்கரன் பேசியிருக்கிறார். கிசு கிசுவாக பேசப்பட்ட இந்த தகவல் உண்மைதானாம். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக எக்ஸ்க்ளூசிவ் தகவலை நம்மிடையே ஆகாஷ் பகிர்ந்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
