சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து
Vijay: "உங்களுக்குச் சொன்னா புரியாது சார்" - விஜய்யைச் சந்தித்தது குறித்து அஸ்வத் மாரிமுத்து
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான `டிராகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
'ஓ மை கடவுளே' படத்தை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்ற, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு இப்படம் டபுள் வெற்றியாக அமைந்தது. பிரதீப் ரங்கநாதனுக்கும் தொடர் வெற்றியாக அமைந்தது.
இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து, 'டிராகன்' படக்குழுவினருடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார். 'டிராகன்' படத் தயாரிப்பாளரும், விஜய்யின் 'G.O.A.T' படத் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்தியும் இவர்களுடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார்.
இதுகுறித்து அஸ்வத் மாரிமுத்து, "நான் எவ்வளவு பெரிய விஜய் சார் ரசிகன் என்று என்னை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். கடினமாக உழைத்து, இயக்குநராக அங்கீகாரம் பெற்ற பிறகு விஜய் சாரை சந்தித்து, அவருடன் படம் பண்ண நினைத்தேன். அவருடன் படம் பண்ணுவேனா என்பது பற்றி எனக்குத் தெரியாது. அவரைச் சந்திக்கும் கனவு இப்போது நிறைவேறிவிட்டது. அவரின் அருகில் உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசினேன். நான் பேசி முடிக்கும் வரை என் படக்குழுவினர் எனக்காகக் காத்திருந்தனர். அவ்வளவு நேரம் அவருடன் நான் பேசினேன்.
My people know i have been working hard to meet him one day with full merit and work with him ! Working part i don’t know but i met him !! I sat right opposite to him ! Usually I talk too much and my team was waiting for me to talk since they know how much a fan i am ! He looked… pic.twitter.com/RtOTUUHgRl
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) March 24, 2025
அங்கிருந்தவர்கள் 'விஜய் சாரை அவ்வளவு பிடிக்குமா?' என்று வியந்து பார்த்தார்கள். அதெல்லாம் உங்களுக்குச் சொன்னால் புரியாது.... 'கிரேட் ரைட்டிங் ப்ரோ' என்று என்னைப் பாராட்டினார். இதுபோதும் எனக்கு..." என்று நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks