ஜார்க்கண்ட்: மத ஊர்வலத்தில் கல் வீச்சு! காவல் துறையினர் விசாரணை!
``நீங்கள் எங்களை உடைக்க முடியும், ஆனால் கொல்ல முடியாது'' - ஹர்திக்கிற்கு ஆதரவாகப் பேசிய க்ருணால்
நேற்றையப் (மார்ச் 22) போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் க்ருணால் பாண்டியா, தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவை விமர்சித்து வருபவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார்.

கடந்த முறை மும்பை நிர்வாகம் ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி ஹர்திக்கை நியமித்ததால் ரசிகர்கள் மத்தியில் ஹர்திக்கிற்குக் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. குறிப்பாக டாஸ் போட வரும்போது மும்பை ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தார்கள். மைதானங்களில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வந்தனர். அவர் மீண்டும் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாட இருக்கிறார்.
இந்நிலையில் க்ருணால் பாண்டியா, தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவை விமர்சித்து வருபவர்களுக்கு கடுமையானப் பதிலடி கொடுத்திருக்கிறார். " நீங்கள் எங்களை உடைக்க முடியும், எங்களை நொறுக்க முடியும். ஆனால் எங்களை கொல்ல முடியாது. நாங்கள் மீண்டு வருவோம். நாங்கள் ஒரு குடும்பமாக மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியா மிக மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டார். அதை பற்றி நான் அதிகம் வெளியே பேசியதில்லை. ஆனால், அவர் தற்போது எழுந்து நின்று தொடர்ந்து போட்டியை வெல்லும் செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்" என்று க்ருணால் ஹர்திக்கிற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
