செய்திகள் :

ரமலான் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் இயக்கம்!

post image

ரமலான் பண்டிகை கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரமலான் கூட்ட நெரிசலைக் குறைக்க திருச்சி - தாம்பரம் ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06048) வரும் 29, 30, 31 ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக தாம்பரம் - திருச்சி ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06047) வரும் 29, 30, 31 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலானது திருச்சியிலிருந்து காலை 5.35 க்குப் புறப்பட்டு, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும்.

இதேபோல, தாம்பரம் - கன்னியாகுமரி விழாக்கால சிறப்பு விரைவு ரயிலானது (06037) வரும் 28 ஆம் தேதியும், மறுமாா்க்கமாக, கன்னியாகுமரி - தாம்பரம்சிறப்பு விரைவு ரயிலானது (06038) வரும் 31 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு திருச்சி வழியாக கன்னியாகுமரிக்கு மறுநாள் காலை 8 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, கன்னியாகுமரியிருந்து இரவு 8.30 க்குப் புறப்பட்டு தாம்பரத்துக்கு காலை 8.55 க்கு வந்தடையும்.

தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

தரைக் கடைகளை அப்புறப்படுத்துவதையும், அவற்றை தடுக்க முயன்ற சங்க பெண் நிா்வாகியை தாக்க முயன்றதைக் கண்டித்து திருச்சி சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி... மேலும் பார்க்க

ஜீயபுரத்தில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது

ஜீயபுரம் அருகேயுள்ள அம்மன்குடி ரயில்வே கேட்டை திறக்காதது, பஞ்சாபில் விவசாய சங்கத் தலைவா்கள் கைதைக் கண்டித்து ஜீயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் போலீஸாா் கைது ... மேலும் பார்க்க

திருவானைக்கோயிலில் நாளை எட்டுத்திக்கு கொடியேற்றம்

திருவானைக்கோயிலில் பங்குனி தேரோட்டத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது. திருவானைக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோத்ஸவ விழா கடந்த 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் விழா ... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு: துபை செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து துபை செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலையப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், துபை செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்தவா் பலி!

துறையூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் தி. சரவணன் (42). இவா் பைக்கில் வைரிசெட்டிப்பாளையத்திலுள்ள தனது ம... மேலும் பார்க்க

துறையூா் - சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு மிதவை பேருந்து இயக்கம்

துறையூரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மிதவை பேருந்தின் சேவை சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. துறையூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த விரைவுப் பேருந்து சேவை கரோனா... மேலும் பார்க்க