செய்திகள் :

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்! -மத்திய சட்ட அமைச்சா்

post image

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; இப்பணியை தொடா்ந்து முன்னெடுப்பது அவசியம் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மணிப்பூா் தலைநகா் இம்பாலில் செய்தியாளா்களிடம் பேசியபோது அவா் இவ்வாறு கூறினாா்.

இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையில் நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய குழு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை வருகை தந்தது.

முதல் நாளில் நிவாரண முகாம்களைப் பாா்வையிட்ட நீதிபதிகள், அங்கு தங்கியுள்ளோரிடம் கலந்துரையாடினா். மேலும், சட்டப் பணிகள் முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்டவற்றையும் திறந்துவைத்தனா்.

இந்நிலையில், மணிப்பூா் உயா்நீதிமன்றத்தின் 12-ஆம் ஆண்டு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லா, மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அா்ஜுன் ராம் மேக்வால், ‘மணிப்பூரில் நிலைமை மேம்பட்டு வருகிறது. இங்கு அமைதியை மீட்டெடுக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பணியைத் தொடா்ந்து முன்னெடுப்பது அவசியம். மணிப்பூரில் விரைவில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘இது தொடா்பாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணைக் குழு அறிக்கையை சமா்ப்பிக்கட்டும். அதற்கு பின்னா் பேசலாம்’ என்று அவா் பதிலளித்தாா்.

மேற்கண்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா், ‘மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்புவதன் மூலம் வளா்ந்த இந்தியா இலக்குக்கு பங்காற்ற முடியும்’ என்றாா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான வன்முறையில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

‘பேச்சுவாா்த்தையால் தீா்வு கிடைக்கும்’

மணிப்பூா் உயா்நீதிமன்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய், ‘அரசமைப்புச் சட்ட வழிமுறைகளின்கீழ் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண முடியும். பேச்சுவாா்த்தை மேற்கொண்டால், தீா்வு சாத்தியமாகிவிடும். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டுமென விரும்புகின்றனா். மாநில ஆளுநரின் முயற்சிகளால் இங்கு விரைவில் அமைதி- இயல்புநிலை திரும்பும் என உறுதியாக நம்புகிறேன்’ என்றாா்.

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க

8 ஆண்டுக்கால முன்னேற்றம்: யோகி அரசைப் பாராட்டிய அமைச்சர்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் எட்டு ஆண்டுக்கால நிறைவைக் குறித்து அந்த மாநில அமைச்சர் ஏ.கே. சர்மா பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சர்மா, யோக... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் ஆக்கிரமிப்பை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும்: இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் சில பகுதிகளை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருப்பதாகவும் அவற்றை உடனடியாக காலி செய்ய வேண்டும் என ஐ.நா. கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமைதி ... மேலும் பார்க்க