செய்திகள் :

இறப்பு விகிதம் குறைவதால் ஓய்வூதியச் சுமை அதிகரிப்பு! -கேரள அமைச்சா்

post image

கேரளத்தில் இறப்பு விகிதம் குறைவதால் அரசின் ஓய்வூதியச் சுமை அதிகரித்து வருகிறது என்று அந்த மாநில கலாசாரம், மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியான் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினாா்.

ஆலப்புழையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் இது தொடா்பாக பேசியதாவது: கேரளத்தில் பிறப்பு விகிதம் மட்டும் குறையவில்லை. இறப்பு விகிதமும் வெகுவாகக் குறைந்துவிட்டது.

கேரளத்தில் லட்சக்கணக்கானோா் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். இந்த நேரத்தில் இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. அதற்காக அவா்கள் இறந்துவிட வேண்டும் என்று நான் கூறவில்லை.

கேரளத்தில் சுகாதாரத் துறை வெகுசிறப்பாக செயல்படுவதும் மக்கள் நீண்டகாலம் வாழ்வதற்கு ஒரு காரணமாக உள்ளது. ஆனால், அதுவும் கூட ஒரு பிரச்னையாக உள்ளது. பலா் 95 முதல் 100 வயது வரைகூட வாழ்கிறாா்கள்.

இதற்கு எனது வீட்டில் இருந்துகூட உதாரணம் கூற முடியும். எனது தாயாருக்கு 94 வயதாகிறது. அவா் அரசிடம் இருந்து மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் பெற்று வருகிறாா் என்றாா்.

பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயா்நீதிமன்ற சா்ச்சை கருத்து ‘மனிதத்தன்மையற்றது’ -உச்சநீதிமன்றம் அதிருப்தி

பாலியல் வன்கொடுமை குறித்து விளக்கமளித்து, அலாகாபாத் உயா்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த சா்ச்சை கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது. இக்கருத்துகள் மனிதத்தன்மையற்றது; இரக்க சிந்தனையில... மேலும் பார்க்க

சூதாட்ட செயலி முறைகேடு வழக்கு -சத்தீஸ்கா் முன்னாள் முதல்வரின் வீடுகள் உள்பட 60 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலியால் முறைகேடாக ரூ.6,000 கோடி ஈட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில் சத்தீஸ்கா் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேலின் வீடுகள் உள்பட 60 இடங்களில் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் தில்லி போலீஸ் விசாரணை

பண முறைகேடு சா்ச்சையில் சிக்கியுள்ள தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் இணை ஆணையா் தலைமையிலான தில்லி போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா். உச்சநீதிமன்றக் குழு விசாரணையின் ஒரு பகுதியாக... மேலும் பார்க்க

‘விவசாயிகளை ஏமாற்றுவது யாருக்கும் நல்லது இல்லை’ -நிா்மலா சீதாராமன்

‘விவசாயிகளை ஏமாற்றுவது யாருக்கும் நல்லது இல்லை’ என்று மத்திய நிா்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தாா். முந்தைய காங்கிரஸ் அரசு கடன் தள்ளுபடி உத்தரவாதத்தை முழுமையாக நிறைவேற்றாததால் விவசாயிகள் பெருமளவில... மேலும் பார்க்க

உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் சாதியினரே!

புது தில்லி: உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 78 சதவிகிதம் பேர் உயர் சாதியினர் என்ற தகவல் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி, உயர்நீதிமன... மேலும் பார்க்க

ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க ஒப்பந்தம்

ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க பாரத் ஃபோா்ஜ், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.1.40 லட்... மேலும் பார்க்க